ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க காண்டிராக்டரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மாநகராட்சி அதிகாரி கைது


ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க காண்டிராக்டரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மாநகராட்சி அதிகாரி கைது
x

மங்களூருவில், ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க காண்டிராக்டரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரியை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு;

ரூ.3 ஆயிரம் லஞ்சம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மந்தாரபயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயலிங்கப்பா. காண்டிராக்டரான இவர், ஒப்பந்த பணிக்கான தொகையை பெற மங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றும் ஆதிக் ரகுமானிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது மாநகராட்சி அதிகாரி ஆதிக் ரகுமான், ஜெயலிங்கப்பாவிடம் ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.


கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயலிங்கப்பா, மங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், ஜெயலிங்கப்பாவிடம் ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்து அதனை ஆதிக் ரகுமானிடம் கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் ஜெயலிங்கப்பா, மாநகராட்சி அதிகாரி ஆதிக் ரகுமானை சந்தித்து ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

அதனை ஆதிக் ரகுமானும் வாங்கிக்கொண்டார். இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார், லஞ்சம் வாங்கிய ஆதிக் ரகுமானை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story