பெண் மீது மயக்க மருந்து தெளித்து ரூ.35 லட்சம் நகை-பணம் கொள்ளை


பெண் மீது மயக்க மருந்து தெளித்து ரூ.35 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து வீட்டுக்குள் புகுந்து பெண் மீது மயக்க மருந்து தெளித்து ரூ.35 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

திருமண பத்திரிகை

கோலார் மாவட்டம் மாலூர் டவுனை அடுத்த சம்பங்கெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி லட்சுமி. இந்த நிலையில் நேற்று மஞ்சுநாத் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தார். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் 3 பேர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு லட்சுமி வந்து கதவை திறந்தார்.

அதில் மர்மநபர்கள் தங்களை தூரத்து சொந்தம் என அறிமுகப்படுத்தி கொண்டனர். மேலும் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறியுள்ளளனர். இதை நம்பிய லட்சுமி அவர்களை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்துள்ளார்.

மயக்க மருந்து தெளித்து...

அப்போது திருமண அழைப்பிதழ் கொண்டு வந்த 3 பேரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை எடுத்து லட்சுமியின் முகத்தில் அடித்துள்ளார். இதில் லட்சுமி மயங்கி கீேழ விழுந்துள்ளார். இதையடுத்து மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்தனர். மேலும் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் இருந்த தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிசென்றனர்.

இதையடுத்து வெளியே சென்றிருந்த மஞ்சுநாத் திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது தனது மனைவி மயங்கி கிடப்பதையும், வீட்டில் இருந்த நகை-பணம் கொள்ளையடித்து இருப்பதையும் பார்த்து அதிா்ச்சி அடைந்தார்.

ரூ.35 லட்சம் நகை-பணம்

உடனடியாக மஞ்சுநாத் சம்பவம் குறித்து மாலூர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை நடத்தினர். அதில் மோப்ப நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரைவழைப்பட்டனர். இவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். இந்த திருட்டில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story