மங்களூரு விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது


மங்களூரு விமான நிலையத்தில்  ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது
x

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

துபாயில் இருந்து...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோர் சட்டவிரோதமாக தங்கம், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்தி வருவதும், அதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்த நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று, அவரது உடைமைகள் அனைத்தையும் சோதனை செய்தனர்.

163 கிராம் தங்கம்

அப்போது அதில் 163 கிராம் எடை கொண்ட தங்கம் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் என்பதும், தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.60 லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரை பஜ்பே போலீசில், சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தியவரின் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.


Next Story