வீடு கட்ட அனுமதி சான்றிதழ் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம்; மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது


வீடு கட்ட அனுமதி சான்றிதழ் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம்; மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது
x

வீடு கட்ட அனுமதி சான்றிதழ் பெற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவமொக்கா மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா;

வீடு கட்ட அனுமதி சான்றிதழ் பெற...

சிவமொக்கா மாவட்டம் வினோபா நகரில் ஒருவர் வசித்து வருகிறார். இவர், புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கான அனுமதி சான்றிதழ் பெற சிவமொக்கா மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அவரிடம், மாநகராட்சி

அலுவலகத்தில் கணினி ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய விஜயகுமார் என்பவர் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர், சிவமொக்கா ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த நபரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.6 ஆயிரத்தை கொடுத்து அதனை முன்பணமாக ஊழியர் விஜயகுமாரிடம் கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த நபரும்,

விஜயகுமாரை தனியாக சந்தித்து முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அதனை விஜயகுமாரும் வாங்கினார்.

கைது

இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார், மாநகராட்சி ஊழியர் விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான ஊழியர் விஜயகுமார் மீது போலீசார்

வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story