போலி தங்கநகைகளை கொடுத்து வியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 6 பேருக்கு வலைவீச்சு
சென்னகிரியில், போலி தங்கநகைகளை கொடுத்து வியாபாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு;
போலி தங்கநகைகளை கொடுத்து...
பெங்களூரு ஆனேக்கல்லை சேர்ந்தவர் பிரகலாத். வியாபாரியான இவர், சந்தேபென்னூர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் நான் உடுப்பி சென்றபோது தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா குலேனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது என்னிடம், ரமேஷ் தங்கநகைகள் உள்ளதாகவும், குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறினார். ஆனால் நான் தங்கநகைகளை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டேன். ஆனாலும் ரமேஷ், என்னை விடாமல் 5 கிராம் தங்கநகையை கொடுத்து சோதித்து பார்க்கும்படி கூறினார்.
அந்த தங்கநகையை வாங்கி தாவணகெரேவில் உள்ள நகை ஆசாரியிடம் சோதனை செய்ய கொடுத்தேன். அப்போது அது தங்கம் என்பது தெரியவந்தது.
ரூ.7½ லட்சம் மோசடி
இதையடுத்து ரமேஷிடம்தங்கநகைகளை வாங்க விருப்பம் தெரிவித்தேன். அதன்படி ரமேஷ், அவரது கூட்டாளிகள் 5 பேர் தங்கநகைகளுடன் வந்தனர். அவர்களிடம் ரூ.7½ லட்சத்தை கொடுத்து தங்கநகைகளை வாங்கினேன். அப்போது அந்த தங்கநகைகள் போலியானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுடன் வாக்குவாதம் செய்து போலி தங்கநகைகளை கொடுத்து பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன்.ஆனால் ரமேசும், அவரது கூட்டாளிகள் 5 பேரும் பணத்தை தருவதுபோல் ஏமாற்றி ரூ.7½ லட்சத்துடன் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
எனவே ரமேஷ், அவரது கூட்டாளிகளை கைது செய்து பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் சந்தேபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உள்பட 6 பேரையும் வலைவீசி ேதடிவருகின்றனர்.