கர்நாடகத்தில், 48 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி நிதி விடுவிப்பு
48 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: மத்திய அரசு பிரதமர் கிஷான் சம்மான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. இதில் கர்நாடகத்தில் மட்டும் 47.83 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடக அரசும் முதல்-மந்திரி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 முறை விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு சார்பில் 47.83 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.956.71 கோடி நிதி உதவியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று விடுவித்தார். கடந்த 2021-22-ம் ஆண்டு 50.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,975 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story