தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு; கர்நாடக அரசு உத்தரவு


தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு; கர்நாடக அரசு உத்தரவு
x

தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் குறிப்பாக பாகல்கோட்டை, கலபுரகி, விஜயாப்புரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சுமார் 1,500 தேவதாசிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 5 மாதங்களாக இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தேவதாசி பெண்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டனர்.

இந்த உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறி இருந்தார். இந்த நிலையில் தேவதாசி பெண்களுக்கு நிலுவையில் உள்ள உதவித்தொகை வழங்குவதற்காக கர்நாடக அரசு ரூ.12 கோடி நிதி விடுவித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story