இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 வழங்கப்படும் - புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.500 வழங்கப்படும் என புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.
புதுச்சேரி,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய 1,25,732 நபர்களுக்கு (57,868 ஆண்கள் மற்றும், 67,864 பெண்கள்) நபர் ஒன்றுக்கு தலா ரூ.500/- என்ற வீதத்தில் ரூ.6,28,66,000/- (ரூபாய் ஆறு கோடியே இருபத்தெட்டு இலட்சத்து அறுபத்தாராயிரம் மட்டும்) இலவச வேட்டி சேலைகளுக்கு பதிலாக பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
மேற்படி பணம் செலுத்தும் பணி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல மந்திரி சந்திர பிரியங்கா அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story