பெலகாவியில், சாலையோர கடையில் டீ குடித்த சச்சின் டெண்டுல்கர்
கோவா செல்லும் வழியில் பெலகாவியில் சாலையோரம் கடையில் டீ குடித்த சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
பெலகாவி:
முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார். இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார். அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story