கர்நாடக பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்


கர்நாடக பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
x

கர்நாடக பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அபய்பிரசாத், கர்நாடக பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள நிலுவை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில், "கர்நாடக பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது இப்போது நடந்த விஷயம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நியமனங்கள் ஆகும். அரசால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்க்ள மற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவை மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் அரசால் அனுமதிக்கப்படாத நியமன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவை மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க இயலாது" என்றார்.

முதல்-மந்திரியின் இந்த முடிவை முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் வரவேற்றார். முன்னதாக பேசிய உறுப்பினர் அபய்பிரசாத், "கர்நாடக பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுவது இல்லை. மேலும் அவர்களுக்கு பல மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Next Story