சாமராஜேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்; 5 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது


சாமராஜேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்; 5 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது
x

5 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த சாமராஜேஸ்வரா சாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மைசூரு மன்னர் யதுவீர் கலந்து கொண்டார்.

சாம்ராஜ்நகர்:

கோவில் திருவிழா

சாம்ராஜ்நகர் டவுன் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சாமராஜேஸ்வரா சாமி கோவில். ஒவ்வொரு ஆண்டும் கன்னட ஆடி மாதம் இந்த கோவில் தேரோட்டம் திருவிழா நடைபெறும். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, மர்ம நபர்கள் சிலர் தேருக்கு தீ வைத்தனர். இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 3 ஆண்டுகள் கோவில் திருவிழா நடைபெறவில்லை. பின்னர் மீண்டும் தேர் திருவிழா நடைபெற இருந்த நிலையில், 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக தொற்று ஏற்பட்டது.

இதனால் கோவில் திருவிழாவை நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் ேநற்று கோவில் திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ரூ.1 கோடி செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, தயார் நிலையில் அலங்காரிக்கப்பட்டு இருந்தது.

தேரோட்டம்

அதன்படி நேற்று திருவிழா தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் மைசூரு மன்னர் யதுவீர் சாமராஜேந்திர உடையார் கலந்து கொண்டு, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த தேரோட்டம் எஸ்.பி.எம் சர்க்கிள், வீரபத்திரேஷ்வரசாமி சர்க்கிள், மாரம்மா கோவில் தெரு, பழைய தக்காளி மார்க்கெட் வழியாக சென்று கோவிலின் முக்கிய நுழைவாயிலை அடைந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சாம்ராஜ்நகர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

குறிப்பாக ஆடி மாதம் என்பதால் தம்பதிகள் கோவில் திருவிழாவில் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்வது கிடையாது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அதிகப்படியாக தம்பதிகள் ஜோடியாக கலந்து கொண்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது.


Next Story