ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு டுவிட்டரில் மிரட்டல் போலீஸ் விசாரணை


ஷாருக்கான் மகனை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு டுவிட்டரில் மிரட்டல் போலீஸ் விசாரணை
x

சமீர்வான்கடேக்கு மர்ம நபர் டுவிட்டரில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீர்வான்கடே கோரேகாவ் போலீசில் புகார் அளித்தார்.

மும்பை,

ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த போது முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கின் மைத்துனர் மற்றும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை வெவ்வேறு போதை பொருள் வழக்கில் கைது செய்தார்.

இதையடுத்து பிறப்பால் முஸ்லிமான சமீர் வான்கடே தாழ்த்தப்பட்டவர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்ததாக நவாப் மாலிக் குற்றம்சாட்டினார். சமீபத்தில் சாதி சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி சமீர் வான்கடேவின் சாதி சான்றிதழ் போலியில்லை என தெரிவித்தது.

இதையடுத்து சமீர்வான்கடே, நவாப் மாலிக் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில் சமீர்வான்கடேக்கு மர்ம நபர் டுவிட்டரில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீர்வான்கடே கோரேகாவ் போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து கோரேகாவ் போலீசார் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story