முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதாக கூறி எனது நாக்கை துண்டிப்பதாக மிரட்டல் கடிதம் வந்தது உண்மை; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி
முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதாக கூறி எனது நாக்கை துண்டிப்பதாக கடிதம் வந்தது உண்மை என்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா;
ஈசுவரப்பாவுக்கு மிரட்டல்
முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமாக இருப்பவர் ஈசுவரப்பா. இவர், காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை சம்பவத்தில் தன் மீதான புகாரின் பேரில் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதி கோர்ட்டில் ஈசுவரப்பா குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பேசுவதாக கூறி நாக்கை துண்டிப்பதாக ஈசுவரப்பாவுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது அந்த மிரட்டல் கடிதம், சிவமொக்காவில் உள்ள அவரது வீட்டு முன்பு யாரோ வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவமொக்காவில் தனது இல்லத்தில் வைத்து ஈசுவரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பெங்களூரு மக்கள் பிரதிநிதி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதேபோல் சிறப்பு கோர்ட்டில் உள்ள வழக்கிலும் நான் குற்றமற்றவன் என்று வெளியே வருவேன். முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருவதாக கூறி எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது உண்மை. அந்த கடிதத்தில்,
முஸ்லிம் மக்களை அடிக்கடி குண்டர்கள் என்று தான் பேசி வருவதாகவும், அநாகரிமான கருத்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதுபோன்று முஸ்லிம் பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையென்றால் உங்களது நாக்கை துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினா