'பாலிஷ்' செய்து தருவதாக கூறி பெண்ணிடம் தாலிச்சங்கிலி 'அபேஸ்'


பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் தாலிச்சங்கிலி அபேஸ்
x

‘பாலிஷ்' செய்து தருவதாக கூறி பெண்ணிடம் தாலிச்சங்கிலி ‘அபேஸ்' செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனா்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சீதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுசிலம்மா. இவர். ேநற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சுசிலம்மாவிடம் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களுக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் சுசிலம்மா, நகைகளை பாலிஷ் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அப்போது அங்கு வந்த பக்கத்துவீட்டுகாரரான கோவிந்தம்மா என்பவர், சுசிலம்மாவிடம் தனது கணவரின் நகைகளுக்கு பாலிஷ் போட்டு உள்ளதாகவும் நீங்களும் கொடுங்கள் என்றும் கூறி உள்ளார். இதைநம்பிய சுசிலம்மா தன்னுடைய 30 கிராம் தாலிச்சங்கிலியை பாலிஷ் செய்ய கொடுத்துள்ளார்.

அப்போது 2 பேரும், சுசீலம்மாவிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துவருமாறு கூறியுள்ளனர். அதன்படி சுசீலம்மாவும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துவர வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும், தாலிச்சங்கிலியை அபேஸ் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இதற்கிடையே பாத்திரத்தில் தண்ணீர் எடு்த்து வந்த சுசிலம்மா, 2 பேரும் தாலிச்சங்கிலியுடன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் 2 பேர் பாலிஷ் செய்து தருவதாக கூறி தாலிச்சங்கிலியை அபேஸ் செய்ததை உணர்ந்தார். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும். இதுகுறித்து சுசிலம்மா, ஒலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தாா். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story