பாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் நகை 'அபேஸ்' மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பாலீஷ் போடுவதாக கூறி  மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் நகை அபேஸ் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் நகை ‘அபேஸ்’ செய்த மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவமொக்கா-

சிவமொக்கா டவுன் டேங்க் மொகல்லா பகுதியில் 80 வயது மூதாட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள கோவிலுக்கு சென்றனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 4 பேர் வந்துள்ளனர்.அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். மேலும் முதலில் மோதிரத்தை கொடுத்தால் இலவசமாக பாலீஷ் போட்டு தருவதாக கூறி உள்ளனர். இதனால் மூதாட்டி தான் அணிந்திருந்த மோதிரத்தை அவர்களிடம் கொடுத்தார்.

அதனை பாலீஷ் செய்து மூதாட்டியிடம் மர்மநபர்கள் 4 பேரும் கொடுத்துள்ளனர். அப்போது மோதிரம் புதியது போல ஜொலித்ததால் மகிழ்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து மர்மநபர்கள் குக்கரை எடுத்து வரும்படி கூறி உள்ளனர்.பின்னர், அதில் பொடியை தூவிய மர்மநபர்கள், அந்த குக்கரில் பொடியை தூவி உள்ளோம், நன்கு கொதிக்க விட்டு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் நகை ஜொலிக்கும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து மூதாட்டி குக்கரை திறந்து பார்த்தபோது, நகைகள் மாயமாகியிருந்தது. இதையடுத்து ஏமாற்றம் அடைந்த மூதாட்டி கோட்டை போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story