மாணவிகளை சேர்த்து விடுவதாக கூறி தனியார் நர்சிங் கல்லூரிக்கு ரூ.47¾ லட்சம் மோசடி


மாணவிகளை சேர்த்து விடுவதாக கூறி  தனியார் நர்சிங் கல்லூரிக்கு ரூ.47¾ லட்சம் மோசடி
x

மாணவிகளை சேர்த்து விடுவதாக கூறி தனியார் நர்சிங் கல்லூரிக்கு ரூ.47¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பிடதி: ராமநகர் மாவட்டம் பிடதி பகுதியில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு வந்த 4 பேர், நிர்வாகியான லோகேசை சந்தித்து பேசினார்கள். அப்போது தாங்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அங்கு இருக்கும் மாணவிகளை பெங்களூரு உள்பட பல பகுதிகளில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் சேர்த்து விட்டு வருவதாகவும் கூறினார்கள்.

அதுபோல், உங்களது நர்சிங் கல்லூரிக்கும் 40 மாணவிகளை சேர்த்து விடுவதாகவும், இதற்காக தங்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும் என்றும் 4 பேரும் கூறினார்கள். இதனை நம்பிய லோகேஷ், ஒரு மாணவிக்கு கட்டணமாக ரூ.1½ லட்சமாக பெற வேண்டும் என்று 4 பேரிடமும் கூறி இருந்தார். பின்னர் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றை 4 பேரும் பெற்று சென்றிருந்தார்கள். அதன்படி மாணவிகளை அந்த நர்சிங் கல்லூரியில் சேர்த்து விட்டுவிட்டு ரூ.12½ லட்சத்தை கொடுத்திருந்தனர். மீதமுள்ள ரூ.47¾ லட்சத்தை கொடுக்காமல் 4 பேரும் மோசடி செய்து விட்டார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவை சேர்ந்த அனூஜ், நிகில், சிவப்பா சாத், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story