சிவசேனா கட்சி விவகாரம்: உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
நீதிதுறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் கண்டிப்பாக வெற்று பெறுவோம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா பிளவுபட்டுள்ளது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.
இதற்கிடையில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் முடிவு எட்டும் வரை கட்சியின் சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யக்கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உத்தவ் தாக்கரே கோரிக்கையை நிராகரித்துள்ளது.
Related Tags :
Next Story