டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேசிய இளைஞர் கட்சி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. இதில், தேர்தலுக்கான வார்டு எல்லை நிர்ணயம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, தேர்தலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தற்போது தேர்தலில் தலையிட முடியாது என்று கூறி டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
காலப்போக்கில் இந்த மனு பயனற்றதாக மாறிவிட்டது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது.