திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை விவகாரம்: கேரள அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை விவகாரம்: கேரள அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து, குத்தகையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி கேரள அரசு சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கேரள அரசாங்கம் 2 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 3 விமான நிலையங்களை பராமரித்து வருகிறது. ஆனால் பராமரிப்பு பணியில் முன் அனுபவம் இல்லாத அதானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது என கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கேரள ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து,மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story