விமானத்திற்குள் புகுந்து பயணியை கடித்த தேள்- ஏர் இந்தியா விமானத்தில் அதிர்ச்சி சம்பவம்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணியை தேள் கடித்துள்ளது.
புதுடெல்லி,
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணியை தேள் கடித்துள்ளது. விமானத்தில் இதுபோல நடப்பது மிகவும் அரிதான சம்பவமாக பார்க்கப்படுகிறது. தேள் கடித்த பயணி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விதிகளை பின்பற்றி விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து தேள் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தில் ஏதேனும் பூச்சிகள் தொல்லை உள்ளதா என சரிபார்த்து ஆலோசனை வழங்குமாறும், தேவைப்பட்டால் பூச்சிகளை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணியாளர்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story