உரிய அனுமதியின்றி இயங்கிய ரெசார்ட்டுக்கு 'சீல்'


உரிய அனுமதியின்றி இயங்கிய ரெசார்ட்டுக்கு சீல்
x
தினத்தந்தி 25 Oct 2022 12:15 AM IST (Updated: 25 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் உரிய அனுமதியின்றி இயங்கிய ரெசார்ட்டிற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

சிக்கமகளூரு:

சிக்கமகளூருவில் இருந்து தரிகெரே செல்லும் சாலையில் அல்லாம்புரா என்னுமிடத்தில் ஒரு ரெசார்ட் உள்ளது. இந்த ரெசார்ட் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக சிக்கமகளூரு நகரவளர்ச்சித்துறை நோட்டீசு அனுப்பி ரெசார்ட்டின் நுழைவாயிலுக்கு பூட்டிவிட்டு சென்றனர். ஆனாலும் அதன்பிறகு பின்பக்கம் நுழைவாயிலை பயன்படுத்தி ரெசார்ட் நடத்தி வந்துள்ளனர். இதையறிந்த நகர வளர்ச்சி தலைவர் ஆனந்த், ஊழியர்களுடன் நேற்றுமுன்தினம் ரெசார்ட்டிற்கு சென்று அங்கு இருந்தவர்களை பலவந்தமாக வெளியே அனுப்பினர். பின்னர் ரெசார்ட்டுக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். மேலும் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட ரெசார்ட்டை, கலெக்டர் அனுமதி பெற்று விரைவில் இடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நகரவளர்ச்சி தலைவர் ஆனந்த் தெரிவித்தார்.


Next Story