கோழி இறைச்சி கடைகளுக்கு சீல்


கோழி இறைச்சி கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்த சிக்கமகளூரு நகரசபை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு டவுன் பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நசரசபைக்கு வாடகை வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களால் சில கடைகள் முறையாக நகரசபைக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக நகரசபை தரப்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் நசரசபைக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நகரசபை தலைவர் வேணுகோபால் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், வாடகை செலுத்தாமல் நகரசபை ஏமாற்றி வந்த கடைகளுக்கு அவர்கள் சீல் வைத்தனர். மேலும், வாடகையை செலுத்திவிட்டு கடை நடத்துமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும், அவர்கள் வாடகையை செலுத்த தவறினால் கடைகளை வாடகைக்குவிட ஏலம் விடுவதாகவும் கூறினர். முன்னதாக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், கடை உரிமையாளர்கள் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story