ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி தீவிரம்


ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி தீவிரம்
x

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மங்களூரு: உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கல்தோடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் பூஜாரி. இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதியின் மகள் சன்னிதி(வயது 7), கடந்த 7-ந்தேதி மாலை பள்ளி முடிந்து பொல்லம்பள்ளி ஆற்றை கடக்கும் மரப்பாலத்தில் நடந்து சென்றுள்ளாள். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து சன்னிதி தவறி ஆற்றில் விழுந்துள்ளாள். இதனால் சன்னிதி, ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள். தகவல் அறிந்த பைந்தூர் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சன்னிதியை மீ்ட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் நீண்டநேரம் தேடியும் சன்னிதி கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து சிறுமியை தேடும்பணி நடக்கிறது. சம்பவம் அறிந்து பைந்தூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஷெட்டி நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் உடுப்பி கலெக்டர் குர்மா ராவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை தேடும் பணியை பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள், கலெக்டர் குர்மா ராவிடம் பொல்லம்பள்ளி ஆற்றை தடுப்பு இல்லாத மரப்பாலத்தில் உயிரை கையில் பிடித்து கடந்து செல்வதாகவும், எனவே புதிய பாலம் அமைத்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Next Story