7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோவோவாக்ஸ்' அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அரசு நிபுணர் குழு பரிந்துரை


7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவாக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி  அரசு நிபுணர் குழு பரிந்துரை
x

7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சீரம் நிறுவனத்தின் 'கோவோவாக்ஸ்' கொரோனா தடுப்பூசியை 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கொரோனா துறைசார் நிபுணர் குழு இதுகுறித்து ஆராய்ந்தது. அதன் அடிப்படையில், 7 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இந்திய தலைமை மருத்து கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.


Next Story