சாக்லெட் பாக்கெட்டுகளில் அடைத்து கஞ்சா விற்பனை


சாக்லெட் பாக்கெட்டுகளில் அடைத்து கஞ்சா விற்பனை
x

யாதகிரியில் சாக்லெட் பாக்கெட்டுகளில் அடைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் சகாப்புரா டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கலால்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சகாப்புரா டவுனில் உள்ள 2 பெட்டிக்கடைகளில் கலால்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சாக்லெட் பாக்கெட்டுகளில் நிரப்பி கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதாவது சாக்லெட் என்று கூறி 2 வியாபாரிகளும் கஞ்சாவை விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கடைகளை நடத்தி வந்த மகேஷ் மற்றும் ராஜு கைது செய்யப்பட்டாா்கள். அவர்களது கடைகளில் இருந்து கஞ்சா நிரப்பிய 300 சாக்லெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பாக்கெட்டுகளில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேர் மீதும் சகாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story