டெல்லியில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் பல எம்.எல்.ஏக்கள் மாயம்: பா.ஜனதாவை குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி தலைவர்கள்!


டெல்லியில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் பல எம்.எல்.ஏக்கள் மாயம்: பா.ஜனதாவை குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி தலைவர்கள்!
x

இன்று ஆம்அத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களை டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்.

இன்று ஆம்அத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை அணுக முடியாத சூழல் உள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கெஜ்ரிவாலின் இல்லத்தில் கூட்டம் நடப்பதற்கு முன்னதாகவே கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை.

இதனையடுத்து டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கவிழ்க்க, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா மிரட்டி, கவர்ந்து இழுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.

கெஜ்ரிவால் தலைமையிலான அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ரூ.20 கோடி வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பல எம்எல்ஏக்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கூட்டத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்பதை ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

நேற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. தற்போது தொடர்பு கொள்ள முடியாத எம்.எல்.ஏ.க்கள் கண்டறியப்பட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் இருப்பார்கள் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே தெரிவித்தார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சியில் இருக்கிறார்கள், கட்சியிலேயே இருப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. அதற்குள் அனைத்து எம்எல்ஏக்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி தெரிவித்தார்.


Next Story