மைனா்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் 'போக்சோ'வில் கைது
கொள்ளேகால் அருகே மைனா்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார்.
கொள்ளேகால்;
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவை அடுத்த சந்தேமரஹள்ளிைய சேர்ந்தவர் 17 வயது மைனர்பெண். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேமரஹள்ளி போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த மைனர்பெண்ணை அதேப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததும், அவர் தான் ஆசைவார்த்தைகள் கூறி மைனர்பெண்ணை அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளேகாலில் பதுங்கி இருந்த வாலிபரையும், அவருடன் இருந்த மைனர் பெண்ணையும் மீட்டனர். இதையடுத்து போலீசார், மைனர்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.