பெண்களுக்கு பாலியல் தொல்லை; போலி டாக்டர் சிக்கினார்
பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் அக்கு பஞ்சர் சிகிச்சை பெயரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பெண்களின் 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யஷ்வந்தபுரம்: பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் அக்கு பஞ்சர் சிகிச்சை பெயரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனில் பெண்களின் 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் வெங்கடரமணா. இவர், அக்கு பஞ்சர் மூலமாக பெண்கள், ஆண்களுக்கு இருக்கும் நோய்களுக்காக சிகிச்சை அளித்து வந்தார். இதற்காக தனது வீட்டின் அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து கிளினிக் போல் வெங்கடரமணா நடத்தி வந்தார். இந்த நிலையில், தனது கிளினிக்குக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை பெற வரும் பெண்களுக்கு வெங்கடரமணா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது அக்கு பஞ்சர் சிகிச்சை அளிப்பதற்காக பெண்களின் ஆடைகளை கழற்றி விட்டு, சிகிச்சை பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச நிலையில் இருக்கும் பெண்களை தனது செல்போனில் வெங்கடரமணா வீடியோவும் எடுத்து வந்திருந்தார். இதுபற்றி அங்கு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு தெரியவந்தது.
போலி டாக்டர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் யஷ்வந்தபுரம், பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையம், சைபர் கிரைம் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலி டாக்டர் வெங்கடரமணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்தி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று போலி டாக்டர் வெங்கடரமணாவை கைது செய்தனர்.
வெங்கடரமணாவின் செல்போனை வாங்கி போலீசார் சோதனை நடத்திய போது, 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வெங்கடரமணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.