மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் போல் செயல்பட்ட ஷாரிக்- பரபரப்பு தகவல்


மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் போல் செயல்பட்ட ஷாரிக்-  பரபரப்பு தகவல்
x

மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் போல் ஷாரிக் செயல்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: மங்களூருவில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஷாரிக், ஒரு மதத்திற்கு பயங்கரவாத சாயம் பூச முயன்றது அம்பலமாகி உள்ளது.

ஆட்டோவில் வெடித்த குண்டு

மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து இருந்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே மைசூருவில் வசித்து வந்த ஷாரிக், தனது அடையாளத்தை காட்டி கொள்ளாமல் இன்னொரு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது போல தன்னை மாற்றி கொண்டு நடை, உடை பாவனைகளை மாற்றினார். மேலும் அவர் தனது செல்போனில் சிவனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் முகப்பு படத்தில் வைத்து உள்ளார்.

கசாப் போல் செயல்பட்ட..

இந்த நிலையில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய கசாப் போல் மங்களூருவிலும் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற ஷாரிக் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. அதாவது கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் பயங்கரவாதி கசாப் என்பவர் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினார். இதில் பலரது உயிரை காவு வாங்கி இருந்தார். கசாப் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றும் முன்பு தனது அடையாளத்தை மற்ெறாரு சமுதாயத்தை சேர்ந்தவர் போல் மாற்றியிருந்தார். மேலும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அவர் விநாயகர் கோவிலுக்கு சென்றதும், தனது கையில் கோவிலில் வாங்கிய கயிறை கட்டியும் இருந்தார்.

அவரது பாணியிலேயே ஷாரிக்கும் தனது அடையாளத்தை மாற்றி மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்ய சதி திட்டம் தீட்டிய பரபரப்பு தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவி நிற டீ-சர்ட்

அதாவது முகச்சவரம் செய்து, முடி திருத்தம் செய்து தனது நடவடிக்கையில் யாரும் அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்த ஷாரிக், குக்கர் வெடி குண்டை மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு பஸ்சில் எடுத்துச் சென்ற சமயத்தில் காவி நிற டீ-சர்ட் அணிந்திருந்தார். குக்கர் குண்டு தீப்பிடித்து எரிந்ததும் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது டீ-சர்ட்டை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு ஆட்டோ அருகில் அங்குமிங்கும் நடமாடியுள்ளார். இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story