முகத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்; ஒரு கண் பார்வையை இழந்தாலும் விடாமுயற்சியால் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற நபர்!


முகத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்; ஒரு கண் பார்வையை இழந்தாலும் விடாமுயற்சியால் யு.பி.எஸ்.சி  தேர்வில் வெற்றி பெற்ற நபர்!
x

உத்தரபிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ 683வது ரேங்க் பெற்றுள்ளார்.

லக்னோ,

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ 683வது ரேங்க் பெற்றுள்ளார்.

மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார்.

இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது. இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார். இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.

இந்த நிலையில், யு.பி.எஸ்.சி தேர்வில் தனது விடாமுயற்சியால் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவர். 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது:-

"நான் என் வாயில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஒரு கண்ணில் என் பார்வை கிட்டத்தட்ட போய்விட்டது. ஒரு வருடமாக என்னால் கேட்க முடியவில்லை. என் தாடையின் ஒரு பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. ஆனால் நான் எப்படியோ உயிர் பிழைத்தேன்.

"என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்" என்று அவர் கூறினார்.

ஒரு கண்ணில் பர்வை பறிபோனாலும், மன உறுதியுடன் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ள 40 வயதான ரின்கூ சிங் இளைய தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.


Next Story