பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மந்திரி சோமண்ணாவுக்கு சித்தராமையா கண்டனம்


பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மந்திரி சோமண்ணாவுக்கு சித்தராமையா கண்டனம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் மந்திரி சோமண்ணாவுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராய்ச்சூர்:

சாம்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சியில் ெபண் ஒருவரை மந்திரி சோமண்ணா கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராய்ச்சூரில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாம்ராஜ்நகரில் நடந்த சம்பவம் மந்திரி சோமண்ணாவின் கலாசாரத்ைத காட்டுகிறது. ஒரு பெண் தனது துயரங்களை அரசிடம் விவரிக்கிறார். ஆனால் மந்திரி சோமண்ணா அவருக்கு கடுமையான வார்த்தைகளால் பதில் அளித்ததுடன், அவரை அடித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சோமண்ணா மந்திரியாக இருக்க தகுதியற்றவர். உங்களுக்கு பொறுமையும், மக்களின் குறைகளை சரி செய்யும் தாகுதியும் இல்லை என்றால், ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story