சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டி துர்காம்பிகை கோவிலில், குருபா சமுதாய மக்கள் சிறப்பு பூஜை


சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டி துர்காம்பிகை கோவிலில், குருபா சமுதாய மக்கள் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா முதல்-மந்திரியாக வர வேண்டி துர்காம்பிகை கோவிலில் குருபா சமுதாய மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

சிக்கமகளூரு-

சித்தராமையா முதல்-மந்திரியாக வர வேண்டி துர்காம்பிகை கோவிலில் குருபா சமுதாய மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பா.ஜனதா 66 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 17 இடங்களும் பிடித்தன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதல்-மந்திரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சித்தராமையா ஆதரவாளர்களும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களும் போட்டி போட்டி போராட்டம், கோவில்களில் சிறப்பு பூைஜ நடத்தி வருகிறார்கள். மேலும் சித்தராமையா வீடு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

டி.கே.சிவக்குமார்

ஒக்கலிகர் சங்கத்தினர் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதேபோல் குருபா சமுதாய மக்கள் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தாவணகெரே டவுன் பகுதியில் துர்காம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் குருபா சமுதாய மக்கள் சார்பில் சித்தராமையா முதல்-மந்திரியாக வர வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அவரது ஆதரவாளர்கள் சித்தராமையா உருவப்படத்தை வைத்து இருந்தனர். பின்னர் குருபா சமுதாய தலைவர் வீரண்ணா கூறுகையில், மாநிலத்தில் அனைத்து சமுதாய மக்களும் முதல்-மந்திரியாக வர சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சித்தராமையா

சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து உள்ளார். அவர் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அனைத்து சமுதாய மக்களிடமும் அன்பாக பழக கூடியவர்.எனவே முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு குருபா சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story