தொகுதிகளை மாற்றினாலும் சட்டசபை தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற மாட்டார்-பா.ஜனதா சொல்கிறது


தொகுதிகளை மாற்றினாலும் சட்டசபை தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற மாட்டார்-பா.ஜனதா சொல்கிறது
x

தொகுதிகளை மாற்றினாலும் சட்டசபை தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற மாட்டார் என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜனதா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது;-ஒவ்வொரு சட்டசபை தோ்தலின் போதும் எதிா்க்கட்சி தலைவரான சித்தராமையா, இதுதான் எனது கடைசி தேர்தல் என்று கூறி வருகிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால், உங்களது அரசியலுக்கு மக்களே முடிவு கட்டுவார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தீர்கள். பாதாமியில் வெற்றி பெற்றுள்ளீர்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதியிலும் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால், வேறு தொகுதியில் நின்று போட்டியிட முடிவு செய்துள்ளீர்கள். உங்களை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் உள்ளிட்டோர் வரிசை கட்டி நிற்கிறாா்கள். இதை உங்களது கட்சிக்குள்ளேயே பேசி கொள்கிறாா்கள். தொகுதிகளை மாற்றினாலும் சட்டசபை தேர்தலில் சித்தராமையா வெற்றி பெற முடியாது.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது ஊழல் மட்டுமே நடைபெற்றிருந்தது. அர்க்காவதி, கே.பி.எஸ்.சி, வக்பு போர்டு சொத்துகள் அபகரிப்பு உள்ளிட்ட முறைகேடுகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.மாநிலத்தில் லோக் அயுக்தா அமைப்புக்கு சமாதிகட்டிய பெருமையும் சித்தராமையாவுக்கே கிடைக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story