அமர்நாத்தில் சிக்கியுள்ள சிவமொக்கா பெண் பக்தர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்


அமர்நாத்தில் சிக்கியுள்ள சிவமொக்கா பெண் பக்தர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்
x

அமர்நாத்துக்கு சென்ற சிவமொக்காவை சேர்ந்த பெண் பக்தர்கள் அங்கு சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவமொக்கா;

அமர்நாத்துக்கு யாத்திரை

சிவமொக்கா மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சுரேகா முரளிதர் தலைமையில் 16 பெண்கள் சிவமொக்காவில் இருந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு யாத்திரை புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 17 பெண்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்றிருந்தனர். அவர்கள் அங்கு வைஷ்ணவி தேவி கோவிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து அமர்நாத்துக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றத்தில் சிக்கி சிலர் உயிரிழந்தனர்.

சிலர் மாயமாகினர். இந்த நிலையில் அங்கு சென்ற சிவமொக்காவைச் சேர்ந்த 16 பெண்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.

ஓரிரு நாட்களில்...

இதனால் சிவமொக்காவில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே முன்னாள் துணை மேயர் சுரேகா, தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் சிவமொக்கா திரும்பி விடுவோம் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது தாங்கள் 16 பேரும் அமர்நாத்தில் உள்ள ஹெலிபேடில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து ஸ்ரீநகர் சென்று பின்னர் கர்நாடகாவுக்கு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.


Next Story