குப்பை கொட்டும் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை- வீடியோ
துப்பாக்கி சூட்டில் மூன்று பெண்கள், உட்பட ஆறு கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது
போபால்
மத்தியப்பிரதேசம் மொரீனா மாவட்டம், லேபா எனும் கிராமத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அருகருகே வசித்துவந்த இரு கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் குடும்பத்தினரிடையே கடந்த 2013ம் ஆண்டு குப்பை கொட்டுவது தொடர்பாக இரு தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு குடும்பத்தினரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற கஜேந்திர சிங்கின் வீட்டை தீர் சிங் ஆயுதங்களால் தாக்கினார்.மேலும் கஜேந்திர சிங் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை திர் சிங் குடும்பத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இத துப்பாக்கி சூட்டில் மூன்று பெண்கள், உட்பட ஆறு கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். குடும்பத்தினர் பெயரோ மற்ற விவரங்களோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 2013ல் தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதி இதி தீர் சிங்கின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து பின்னர் இரு குடும்பத்தினரும் சமூக சமரசம் செய்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை காலை, தீர் சிங்கின் குடும்பத்தினர் முதலில் கஜேந்திர சிங்கின் குடும்பத்தினரை தடியால் தாக்கினர், தகராறு அதிகரித்தபோது, தீர் சிங்கின் தரப்பைச் சேர்ந்த ஷியாமும் அஜித்தும் சேர்ந்து கஜேந்திர சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 6 பேர் பலியானார்கள்.