இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!


இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
x

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மாறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,168 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நேற்று 7 ஆயிரத்து 946 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 168 ஆக குறைந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,36,339 லிருந்து 4,44,42,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 9,685 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,45,680 லிருந்து 4,38,55,365 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். இதுவரை 5,27,932 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62,748 லிருந்து 59,210 ஆக குறைந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 212 கோடியே 72 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 22,40,162 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story