கர்நாடகத்தில் இதுவரை ரூ.375 கோடி பொருட்கள் பறிமுதல்


கர்நாடகத்தில் இதுவரை ரூ.375 கோடி பொருட்கள் பறிமுதல்
x

கர்நாடகத்தில் இதுவரை 375 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.375 கோடி பொருட்கள்...

கர்நாடகத்தில் இதுவரை ரூ.147 கோடியே 46 லட்சத்து 9 ஆயிரத்து 112 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.24 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 587 மதிப்புள்ள பரிசு பொருட்களும், ரூ.83 கோடியே 66 லட்சத்து 05 ஆயிரத்து 673 மதிப்புள்ள மதுபானமும், ரூ.23 கோடியே 66 லட்சத்து 96 ஆயிரத்து 606 மதிப்புள்ள போதைப்பொருளும், ரூ.96 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 603 மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.375 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 582 மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 2,896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 69 ஆயிரத்து 865 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். 20 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story