மாரப்படைப்பால் ராணுவ வீரர் மரணம்


மாரப்படைப்பால் ராணுவ வீரர் மரணம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாரப்படைப்பால் ராணுவ வீரர் உயிரிழந்தார். சொந்த ஊருக்கு உடலை கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடகு;


குடகு மாவட்டம் சோமவார்பேட்டையை சேர்ந்தவர் மகேஷ்(வயது 46). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 22 ஆண்டாக ராணுவத்தில் பணியாற்றி வரும் அவர், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். அதாவது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். இந்த தகவல் குடகில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு உடல் கொண்டுவரப்படுகிறது.

அங்கு ராணுவ முகாமில் முழு அரசு மரியாதை செலுத்தப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டுவரப்பட இருக்கிறது.


Next Story