தொழில்அதிபர் கொலையில் மகன் கைது


தொழில்அதிபர் கொலையில் மகன் கைது
x

தொழில்அதிபர் கொலை வழக்கில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தையின் சொத்தை அபகரிக்கு கூலிப்படையை ஏவி அவரை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:-

தொழில்அதிபர் கொலை

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் மணிகண்டன். தொழில் அதிபரான நாராயணசாமிக்கு சொத்துக்கள் அதிகம் இருந்தன. ஆனால் அவற்றை மணிகண்டன் பெயருக்கு அவர் மாற்றாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சாலையில் நடந்து சென்ற நாராயணசாமியை மர்மநபர்கள் படுகொலை செய்தனர்.

இதுதொடர்பாக மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது நாராயணசாமி கொலைக்கும், அவரது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து அவரது மகன் மணிகண்டனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் கூலிப்படையை ஏவி, தனது தந்தையை கொன்றது தெரிந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் கூலிப் படையை சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சொத்தை அபகரிக்க...

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீசார் சமர்ப்பித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாராயண சாமி உடல் ஆரோகியத்துடன் இருந்துள்ளார். இதனால் தனது தந்தை மேலும் 20 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் எனவும், அதனால் சொத்துக்களை தான் அனுபவிக்க முடியாது எனவும் மணிகண்டன் நினைத்துள்ளார். இதனால் சொத்தை அபரிக்கும் நோக்கில் தனது தந்தையை கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்தார். மேலும் மணிகண்டன் வாக்குமூலத்தில், தனது தந்தை செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் ஆத்திரத்தில் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.


Next Story