மகன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மகன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் காவ்யா. இவரது மகன் பிரதீக். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி புத்தூரில் இருந்து மங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதீக்கை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் பிரதீக்கை காவ்யா கவனித்து வருகிறார். இந்தநிலையில் தனது மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என காவ்யா புலம்பி கொண்டே இருந்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் இருந்து காவ்யா நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் காவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.