சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்


சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
x

சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் , படிப்படியாக அவர் குணமடைந்து வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story