மியான்மரில் சிக்கியுள்ள் இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசு


மியான்மரில் சிக்கியுள்ள் இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசு
x

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.


புதுடெல்லி,

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியிருந்த சூழ்நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய இணை மந்திரி முரளிதரன் டுவிட்டரில் பதிவிடுள்ளதாவது:-

மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய தூதர் என்னிடம் விவரித்தார், மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.


Next Story