Normal
சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 32 பேர் கைது
சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்
பெங்களூரு: பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டினர் தங்கி உள்ளார்களா? என்று நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது வெளிநாடுகளை சேர்ந்த 19 ஆண்கள், 13 பெண்கள் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருப்பது தெரிந்தது. இதனால் அவர்கள் 32 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story