கர்நாடகத்தில் ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை


கர்நாடகத்தில் ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை ரூ.2,000 உயர்த்த முதல்-மந்திரியிடம் முறையிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

ஆஷா ஊழியர்கள்

ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு பெங்களூருவில் உள்ள ஆசிரியர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நான் சுகாதாரத்துறை மந்திரியாக வந்த பிறகு ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை ஆண்டுக்கு ரூ.1,000 உயர்த்தியுள்ளேன். இந்த முறையும் சம்பளத்தை உயர்த்துமாறு கோரி நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள். இதை பரிசீலிப்பேன். இந்த முறை உங்களின் சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் உயா்த்துமாறு முதல்-மந்திரியிடம் முறையிட்டுள்ளோம்.

சுகாதார திட்டங்கள்

ஆஷா ஊழியர்களின் நல நிதியை ஏற்படுத்தி அதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்குமாறு கேட்டுள்ளீர்கள். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மத்திய-மாநில அரசுகளின் சுகாதார திட்டங்களின் பயனை சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உங்களின் பங்கு முக்கியமானது. நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆஷா ஊழியர்கள் உள்ளனர்.

கர்நாடகத்தில் பிரசவத்தின்போது, தாய்-சேய் மரணம் நிகழ்வதை குறைக்க வேண்டும். அதில் உங்களின் பங்கு முக்கியமானது. நமது சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி ஊட்டச்சத்து குறைபாடு. இதற்கு ஏழ்மை மட்டும் காரணமல்ல. இதை அனைத்து கோணங்களிலும் பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறு சுதாகர் பேசினார்.


Next Story