மணிப்பூர் வன்முறையை உடனே நிறுத்துங்கள் - ராகுல் காந்தி டுவீட்
மணிப்பூர் வன்முறையை உடனே நிறுத்துங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் வன்முறையை உடனே நிறுத்துங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
பிரதமரே, இது நாட்டுக்கு அவமானம் என்பது அல்ல.மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் வலியும் அதிர்ச்சியும்தான் பிரச்சினை. வன்முறையை உடனே நிறுத்துங்கள்.என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story