சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதால் பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நிறுத்தம்?


சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதால்  பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நிறுத்தம்?
x

சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதால் பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டதா?

பெங்களூரு: பெங்களூருவில் சமீபத்தில் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாகி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் மழை பாதிப்புக்கு முக்கிய காரணம் ராஜ கால்வாய்கள் ஆக்கிரமிப்பு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். மேலும் பெங்களூருவில் 660-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ராஜகால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்படும் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார். அதன்படி, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மகாதேவபுரா மண்டலம் உள்ளிட்ட 20 பகுதிகளில் ராஜ கால்வாய் மீது கட்டப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.


இந்த நிலையில், பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிராக சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் முக்கிய நிறுவனங்கள், பிரபலமானவர்கள், வசதி படைத்தவர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவிப்பதால், ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றதால், கூட்டத்தொடரின் போதுஎதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினையை பதிலளிக்க ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை நடத்திவிட்டு, தற்போது பணியை மாநகராட்சி நிறுத்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


Next Story