பெங்களூருவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய தெருநாய்


பெங்களூருவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய தெருநாய்
x

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய தெருநாயை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

பெங்களூரு-

பெங்களூருவில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந் தேதி ஒயிட்பீல்டு-பட்டந்தூர் அக்ரஹாரா இடையே 3½ கிலோ மீட்டர் மெட்ரோ சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக ரெயில் பாதையில் தண்டவாளங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கருடாச்சார்பாளையா மெட்ரோ நிலையத்தில் ரெயில் தண்டவாள பகுதியில் தெருநாய் ஒன்று சிக்கி கொண்டது. அந்த நாய் அங்கிருந்து வெளியேற வழியின்றி தவித்தது.

அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து மெட்ரோ நிலைய நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி முதல்கட்டமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் வலையை கொண்டு தண்டவாளத்தில் நின்ற இருந்த நாயை பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story