சுகாதார மையங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவு தீவிரமாக அமல்


சுகாதார மையங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவு தீவிரமாக அமல்
x

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு:-

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது மனித சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. அதனால் தான் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர பிளாஸ்டிக் பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1-ந் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மையமாக அறிவிக்க வேண்டும் என்றும், தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளோம். இதுகுறித்து அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று ஆஸ்பத்திரி வளாகங்களில் தகவல் பலகை வைக்கப்படும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story