ஜம்மு எல்லைப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
ஜம்மு எல்லைப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துக்கொண்டார்.
ஜம்மு,
காஷ்மீரின் ஜம்முவில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராம்தேவ் சிங். இவர் நேற்று காலை தனது அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடலின் அருகில் துப்பாக்கி கிடந்தது.
இதனை பார்த்த சக போலீஸ்காரர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
Related Tags :
Next Story