ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதியின் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.

புதுடெல்லி,

ஞானவாபி மசூதி வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்ற கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு நவம்பர் 12ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

இந்த நிலையில், சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதியின் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கவுள்ளது.

ஞானவாபி வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பிஎஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு உள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.


Next Story